கிச்சன் கீர்த்தனா : வெஜிடபிள் மிளகு அவல் உப்புமா

Published On:

| By christopher

veg milagu aval upma

வித்தியாசமாக இந்த வீக் எண்டில் எந்த செய்யலாம் என்று நினைப்பவர்கள் இந்த  வெஜிடபிள் மிளகு அவல் உப்புமா செய்து அசத்தலாம். உப்புமாவா என்று வெறுப்பவர்கள்கூட, விரும்பிச் சாப்பிடுவார்கள். veg milagu aval upma

என்ன தேவை?

கெட்டி அவல் –  200 கிராம்
பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய், வெங்காயம்  – சிறிதளவு
மிளகு, சீரகம்  தலா – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்  – சிறிதளவு
பொட்டுக்கடலை  – இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு  – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய்  4 டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு

எப்படிச் செய்வது?  

மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். அவலை நீரில் களைந்து எடுத்து… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடித்த மிளகு  சீரகம், பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பிசிறி வைத்த அவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கேரட், குடமிளகாயை வதக்கி இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share