ADVERTISEMENT

ஓடிடியில் முதலிடம் பிடித்த வீரன்!

Published On:

| By Jegadeesh

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் திரைப்படம் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மரகதநாணயம் திரைப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீரன். இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஆதிரா, சசி, வினய், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்திருந்தார்.

ADVERTISEMENT

கடந்த ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வீரன் திரைப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனிடையே, கடந்த ஜூன் 30 ஆம் தேதி வீரன் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்திய அளவில் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிகமானோர் பார்க்கும் திரைப்பட பட்டியலில் வீரன் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக அப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை தற்போது ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் சமூக வலைதளபக்கங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட வேண்டும்: துரை முருகன்

சுப்ரமணியபுரம் வெளியாகி 15 வருடம் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share