வீர தீர சூரன் : மூன்று கெட்டப்பில் நடிக்கும் விக்ரம்?

Published On:

| By Selvam

நடிகர் விக்ரமின் அடுத்த படமான சியான் 62 குறித்த ஒரு சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா படத்தை அனைவரும் பாராட்டி இருந்தனர்.

சித்தா வெற்றிக்கு பிறகு இயக்குநர் அருண்குமார் விக்ரமின் 62 வது படத்தை இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை HR பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் முதல் Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவில் நடிகர் விக்ரம் செம மாஸ் ஆக என்ட்ரி கொடுத்து அசத்தினார்.

மேலும், இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. விக்ரமின் 62 வது படத்திற்கு வீர தீர சூரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த டீசரில் மளிகை கடை நடத்தும் ஒரு சாதாரண நபராக முதலில் காட்டப்படும் விக்ரம் எதிரிகளை கண்டவுடன் துப்பாக்கி எடுத்து சுடுவது போல அந்த டீசர் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த டீசரில் அதிக தாடியுடன் இருக்கும் விக்ரமின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், வீர தீர சூரன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மூன்று கதாப்பாத்திர வேடத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் என்றும் அதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகம் அதாவது prequel வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக ஒரு பக்கா கமர்சியல் வெற்றியை கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நடிகர் விக்ரமுக்கு சாமி, தூள், அந்நியன் போன்ற படங்கள் கொடுத்த ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டை அருண்குமாரின் “வீர தீர சூரன்” திரைப்படம் பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோடைக்கால விளையாட்டு பயிற்சிக்கு கட்டணம்: எடப்பாடி எதிர்ப்பு!

நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி செயலிழப்பு: எல்.முருகன் ரியாக்‌ஷன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share