விக்ரமின் வீர தீர சூரன் 2 வெளியீட்டிற்கான இடைக்காலத் தடையை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் இப்படம் இன்று (மார்ச் 27) மாலை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. veera dheera sooran release from march 27 evening show
சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வீர தீர சூரன் 2. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்று ரிலீசாக இருந்த நிலையில், OTT உரிமம் தொடர்பாக B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை வெளியிட டெல்லி நீதிமன்றம் 4 வாரங்கள் தடை விதித்தது.
எனினும் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதற்காக படத்தயாரிப்பு நிறுவனமும், B4U நிறுவனமும் இருதரப்பு சமரச பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் வீர தீர சூரன் 2 வெளியீட்டிற்கான இடைக்காலத் தடையை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து வீர தீர சூரன் 2 உலகம் முழுவதும் இன்று மாலை 6 மணி காட்சி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வீர தீர சூரனை தவறவிடாதீர்கள்! veera dheera sooran release from march 27 evening show
இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளரான ரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இதோ எங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தாமதத்திற்கு மன்னிக்கவும்.
எங்களுடன் பொறுமையாக இருந்ததற்கு நன்றி மற்றும் எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. தற்போது வீர தீர சூரன் 2 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காளியாக நடித்துள்ள நமது விக்ரமின் அதிரடி அவதாரத்தை கண்டுகளிக்க தயாராகுங்கள். வீர தீர சூரனை தவறவிடாதீர்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.