விக்ரமின் வெற்றிகரமான ‘ஆக்ஷன்’ படமா? Veera Dheera Sooran Movie Review
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ என்று தான் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமானதொரு திரையனுபவத்தைத் தந்தவர் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார். கவனிக்கப்படாமல் போன அவரது சிந்துபாத்’தும் கூட இதில் அடங்கும். அதுவே, ‘சித்தா’ வெற்றிக்குப் பிறகு விக்ரமை நாயகனாகக் கொண்டு ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலைக் கவனிக்க வைத்தது. இதோ, இப்போது ‘வீர தீர சூரன்’ பல சிக்கல்களைத் தாண்டி திரையை வந்தடைந்திருக்கிறது. Veera Dheera Sooran Movie Review
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவைத் தேனி ஈஸ்வர் கையாண்டிருக்கிறார். Veera Dheera Sooran Movie Review
விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு, பிருத்விராஜ், மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி, பாலாஜி, ரமேஷ் இந்திரா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். Veera Dheera Sooran Movie Review
’வீர தீர சூரன்’ படம் திரையனுபவம் எத்தகையது?
‘பழிவாங்கல்’ கதை! Veera Dheera Sooran Movie Review

காவல் துறையினரும் ரவுடிகளும் மிரள்கிற அளவுக்கு ஒரு ‘சம்பவத்தை’ நிகழ்த்திய பின்னர், பெரும்பாடு பட்டு ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று அமைதியான ஒரு வாழ்வை மேற்கொண்டு வருகிறார் நாயகன்.
மளிகைக்கடை வைத்துக்கொண்டு, மனைவி, மகள், மகன், தனது தாய் என்று சிறு வட்டத்திற்குள் வாழ்க்கைக்கான திருப்தியைக் கண்டு வருகிறார். அந்த அமைதிக்குளத்தில் சிறு கல் அல்ல, பெரும் குன்றைச் சரித்தது போன்றதொரு சூழல் ஒருநாள் நள்ளிரவில் வந்து சேர்கிறது. Veera Dheera Sooran Movie Review
நாயகனுக்கு ‘காட்பாதர்’ ஆக இருந்த முன்னாள் ரவுடியும் இந்நாள் பெரிய மனிதருமான ஒருவர் தேடி வருகிறார். ‘என் மகனை என்கவுண்டர் பண்ண முடிவு பண்ணியிருக்காங்க. இதை பண்ற அந்த எஸ்பிய தூக்கணும். அது உன்னால மட்டும்தான் முடியும்’ என்று அவரிடத்தில் கெஞ்சுகிறார். Veera Dheera Sooran Movie Review
தான் கொண்டிருக்கிற அமைதியான வாழ்வை விட்டுவிட முடியாது என்று பதிலளிக்கிறார் நாயகன். அவர் எவ்வளவு சொன்னாலும் அந்த பெரிய மனிதர் கேட்பதாக இல்லை. ஒருகட்டத்தில் அவரது காலில் விழுகிறார்.
அது நாயகன் மனதை இளக்குகிறது. அதன்பிறகே, அவர் சொல்கிற மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைக் கொல்ல ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்த காரியத்தை நிகழ்த்துவது அத்தனை சுலபம் அல்ல.
அன்றிரவு ஊரில் திருவிழா நடக்கிறது. போலீஸ் காவல் ஒருபக்கம் இருக்க, மக்கள் அதிகமாக நடமாடிக் கொண்டிருப்பார்கள். அதற்கு நடுவே, அந்த அதிகாரியைக் கொல்ல வேண்டும்.
நாயகனால் அதனைச் சாத்தியப்படுத்த முடிந்ததா, இல்லையா என்று சொல்கிறது ‘வீர தீர சூரன்’ படத்தின் மீதி.
இந்தக் கதையில் என்ன புதுமை என்று கேட்கலாம்.
நாயகனிடம் உதவி கேட்டு வரும் பெரிய மனிதரும் அவரது மகனும் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சொல்ல ஒரு ‘பிளாஷ்பேக்’ இதிலுண்டு. அது, இப்படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்களின் இயல்பை, குணாதிசயத்தை, சிந்தனைப்போக்கை நமக்குணர்த்தும். கூடவே, நாயகன் அவர்களைப் பற்றி தன் மனதில் என்ன நினைக்கிறார் என்பதையும் புலப்படுத்தும்.
அதனை நாம் மெதுவாக உணரும் அளவுக்கு வித்தியாசமான கதை சொல்லலைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார். அதன் வழியே ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் அடிநாதமாக ‘பழிக்குப் பழி’ இருக்கிறது என்பது விளங்கும்.
’நம்ப வைக்கும்’ பேருழைப்பு! Veera Dheera Sooran Movie Review

ஒரு திரைப்படத்தோடு ரசிகர்கள் ஒன்றும்போது, திரையில் சில பிம்பங்களைக் காண்கிறோம் என்ற எண்ணம் மறந்துபோக வேண்டும். சினிமாவில் சாதித்த பெருங்கலைஞர்கள் சொல்கிற வாக்கியம் இது. Veera Dheera Sooran Movie Review
அதனைச் சாத்தியப்படுத்த, ‘வீர தீர சூரன்’னில் தனது நடிப்புக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து பேருழைப்பைக் கொட்டியிருக்கிறார் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார். அது அவர் திரையில் காட்டுகிற உலகத்தை நம்ப வைக்கிறது.
இயக்குனர் மீது பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிற படைப்பாக ‘வீர தீர சூரன்’ உள்ளது. அந்த முயற்சிக்குப் பலன் கிடைத்தாற்போல, அவர் முன்வைக்கிற உலகத்தில் நாம் ஒரு அங்கமாகிறோம். அது மட்டுமே உண்மை என்று நம்பத் தொடங்குகிறோம். அதுவே இப்படத்தின் வெற்றி.
அதேநேரத்தில், அதற்காக இயக்குனர் கைக்கொண்டிருக்கும் திரைக்கதை ட்ரீட்மெண்ட், கதை சொல்லும் முறை, கதாபாத்திர வார்ப்பு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு எல்லா ரசிகர்களையும் ஈர்க்குமா என்றால் ‘ப்ச்’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனென்றால், இது முழுமையான ‘மாஸ் கமர்ஷியல்’ படமாக அமையவில்லை. ‘கிளாசிக் டச்’ என்ற பெயரில் காதைச் சுற்றி மூக்கைத் தொடும் வகையிலான திரைமொழி அதற்கொரு காரணம்.
இந்தப் படத்தில் காளியாக விக்ரம், கலைவாணியாக துஷாரா விஜயன், காளியின் தாயாக ஸ்ரீஜா ரவி, ரவி ஆக பிருத்விராஜ், அவரது மனைவியாக மாலா பார்வதி, கண்ணனாக சூரஜ் வெஞ்சாரமூடு, போலீஸ் சூப்பரின்டண்ட் அருணகிரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளனர்.
‘பிளாஷ்பேக்’ பகுதியில் பெரியவராக நடித்துள்ள ரவி இந்திரா, அடியாள் வெங்கட்டாக வரும் பாலாஜி, சூரஜ்ஜின் தங்கையாக வருபவர், திரைக்கதையின் தொடக்கத்தில் வில்லன் தரப்பு மீது புகார் கொடுக்கும் கணவன் மனைவி என்று குறிப்பிட்ட சிலர் நம் மனதில் நிற்கும்விதமாகப் படத்தில் தோன்றியிருக்கின்றனர்.
இது போக குறைந்தபட்சம் சுமார் மூன்று டஜன் பேராவது தலைகாட்டியிருப்பார்கள். அந்த ‘காஸ்ட்டிங்’ தான் இப்படம் வித்தியாசமானது என்று உணர்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், ஓரிரவில் நிகழ்வதாக வரும் திரைக்கதையை நாம் நம்புகிற அளவுக்குக் காட்சியாக்கத்தில் மெனக்கெட்டிருக்கிறார். கதை சொல்லலில் வரும் பரபரப்பை நமக்குக் கடத்துகிறேன் பேர்வழி என்று ஒரு பிரேமில் கூட அவர் கையாண்ட ‘ரிதமை’ தவறவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சர்யமூட்டுகிறது.
அவருக்கு கைகொடுக்கிற விதத்தில் கலை இயக்குனர் சி.எஸ்.பாலச்சந்தர் களப் பின்னணியை அமைத்திருக்கிறார். Veera Dheera Sooran Movie Review
படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னாவின் உழைப்பில் முன்பாதி ஓகே; பின்பாதிதான் நம்மை அயர்ச்சியுற வைக்கிறது. Veera Dheera Sooran Movie Review
தொடக்க காட்சியில் வில்லன் தரப்பு மீது புகார் கொடுக்கும் பெண்மணி என்ன ஆனார் என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாகத் திரையில் சொல்லியிருக்கலாம். அந்த இடத்தில் அப்பாத்திரத்திற்கான ‘இடத்தை’ கொடுக்க மறந்தவர், பிளாஷ்பேக் பகுதியில் நாயகன் நாயகியின் காதல் களியாட்டங்களுக்கும் கிளைமேக்ஸில் நாயகனின் ஹீரோயிசத்தை காட்டும் சண்டைக்காட்சிகளுக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்.
குறிப்பாக, இறுதி சண்டைக்காட்சி முழுக்க வன்முறையில் தோய்க்கப்பட்டிருக்கிறது. அதனை விலாவாரியாகக் காட்டியிருப்பது அயர்ச்சி தருகிறது. இப்படம் தொய்வாக இருப்பதாக உணர, தெரிந்தோ தெரியாமலோ அவரும் ஒரு காரணமாகியிருக்கிறார்.
ஒரு சண்டைக்காட்சியில் ‘மதுரை வீரன் தானே’ பாடல் வருகிறது. ஒரிஜினலாகவே ‘தூள்’ படத்தில் அது போன்ற சூழலில்தான் அப்பாடல் இடம்பெற்றிருக்கும்.
அந்த காலகட்டத்தில் அது வித்தியாசமானதாகப் பேசப்பட்டது. ஆனால், ‘வீர தீர சூரன்’ மாதிரியான ‘பழிவாங்கும் படலம்’ கொண்ட ஒரு திரைப்படத்தில் அது தேவையற்ற ‘ஆணியாகவே’ இருக்கிறது. இந்த ஐடியாவை சொன்னது யாரோ?

இப்படத்தில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை நீளும் ‘சிங்கிள் ஷாட்’ ஒன்று உண்டு. ரவுடி, போலீஸ் மோதலாக காட்டப்பட்டிருப்பதும் நள்ளிரவில் நிகழ்வதாகச் சொல்லப்பட்டிருப்பதும் அதன் சிறப்புகளாக உள்ளன.
இசையைப் பொறுத்தவரையில், தனது சமீபகாலப் படங்கள் போன்று இதிலும் ஜி.வி.பிரகாஷ்குமார் அசத்தியிருக்கிறார். ‘ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படத்திற்கு இதுவே தேவை’ எனும்படியான பின்னணி இசையையும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிற பாடல்களையும் தந்திருக்கிறார்.
இப்படத்தின் டிஐ, விஎஃப்எக்ஸ் மற்றும் ஆடியோகிராஃபி, மேக்கப் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் அதீத கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர். அதற்குச் சம்பந்தப்பட்டவர்களும் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்திருப்பதால், ‘வீர தீர சூரன்’ ஒரு விஷுவல் விருந்தாக இருக்கிறது.
இந்த படத்தில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் தங்கள் குடும்பத்தைக் காக்கவே முயற்சிக்கின்றன. அதற்காகப் பிற குடும்பங்களை அழிப்பதை தவறாக எண்ணுவதில்லை. நாயகன் மனதிலும் அது மட்டுமே இருக்கிறது.
திரைக்கதையின் தொடக்கத்திலேயே அதனைச் சொல்லிவிடும் இயக்குனர், வில்லன்களின் குயுக்திகளை, வன்மத்தைப் போதுமான அளவில் திரையில் வெளிப்படுத்த துணை நிற்கவில்லை. ’ரசிகர்கள் தானாக அதனை உணர்ந்துகொள்வார்கள்’ என்று அவர் விட்டிருப்பது சரியான முடிவல்ல.
அதனால், நாயகன் இப்படத்தில் யாரைக் காக்க முயல்கிறார், யாரை கொல்ல விரும்புகிறார் என்பதை நாம் உள்வாங்குவதில் நிறையவே குழம்ப வேண்டியிருக்கிறது. கொஞ்சம் கூர்ந்து யோசித்தால் மட்டுமே இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படத்தின் பலவீனம் அதுவே.
போலவே, கிளைமேக்ஸ் ஷாட்டில் தலைகாட்டும் போலீசார் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லாமல் விட்டிருப்பதும் நம்மை ‘கிர்’ரென்று ஆக்குகிறது.
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக உருவெடுத்திருக்க வேண்டிய வாய்ப்பை அது போன்ற சில பகுதிகளை இயக்குனர் வடிவமைத்த விதத்தில் தவறவிட்டிருக்கிறது ‘வீர தீர சூரன்’.

அதே நேரத்தில், கமர்ஷியல் படத்தில் கூட ‘கிளாசிக்’ ஆன மொமண்ட்களை இடம்பெறச் செய்ய முடியும் என்ற தனது நோக்கத்தில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். அதற்காக அவர் இப்படத்தில் கையாண்டிருக்கும் கதை சொல்லல் நிச்சயம் பாராட்டுக்குரியது.
இப்படம் குடும்பத்தோடு சென்று காணக்கூடிய ‘ஜனரஞ்சக படமாக’ அமையவில்லை. அது போன்று சில குறைகளைப் புறந்தள்ளிவிட்டால், ஒரு வித்தியாசமான ‘ஆக்ஷன் த்ரில்லர்’ ஆக இந்த ‘வீர தீர சூரன்’ தோற்றம் தரும். அந்த வகையில், இது விக்ரமுக்கு ஒரு வெற்றிப் படம் தான்!
