தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் கடுமையான சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது.
நெல்லை கவின் ஜாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை தமிழக அரசு உடனே நிறைவேற்ற கோரி போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது.
ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 9-ந் தேதி சென்னையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 11-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிகவினர் போராட்டம் நடத்த உள்ளனர்.
