கூட்டணியின் பெயர் அதிகாரப்பூர்வமானதல்ல – காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்திக்கு திருமா எதிர்ப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Praveen

கூட்டணியின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று கூறி, காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) முதல் எம்பி (MP) வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும், பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்” என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி இன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கூட்டணியின் பெயர் அதிகாரப்பூர்வமானதல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share