விசிக மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு இன்று (அக்டோபர் 2) நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் மதுவிலக்கு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. அரசமைப்பு சட்டம் உறுப்பு எண் 47-ல் கூறியுள்ளவாறு மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிப்பு செய்ய வேண்டும்.
2. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியை வழங்க வேண்டும்.
3. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதிப்பகிர்வு அளிக்க வேண்டும்.
4. மதுவிலக்கு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
5. தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபானக் கடைகளை மூடுவதற்கு உரிய கால அட்டவணையை தமிழக அரசு அறிவித்திட வேண்டும்.
6.தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
7.மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பிற்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்திட வேண்டும்.
8.குடி நோயாளிகளுக்கும் போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை உருவாக்க வேண்டும்.
9. மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும்.
10. டாஸ்மாக் என்னும் அரசு நிறுவனத்தின் மது வணிக தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிட வேண்டும்.
11. மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
12. மதுவிக்கு பரப்பியக்கத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.