பானை சின்னம் கேட்டு விசிக மனு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published On:

| By Selvam

பானை சின்னம் ஒதுக்கக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் டெல்லி உயநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று (மார்ச் 27) மதியம் விசாரணைக்கு வருகிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போலவே விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும், பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் இரண்டு வேட்பாளர்களும் தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளனர். மேலும், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் விசிக போட்டியிட உள்ளது.

இந்தநிலையில், விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த மாதம் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனு அளித்தார். தமிழகத்தில் இன்றுடன் வேட்புமனு தாக்கல்  நிறைவடைய உள்ள நிலையில், விசிகவுக்கு இன்னும் பானை சின்னம் ஒதுக்கவில்லை. இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக தேர்தல் அறிக்கை!

நாம் தமிழர் கட்சி ‘மைக்’ சின்னத்தில் போட்டி: சீமான் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share