2024 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஏப்ரல் 23) கர்நாடகா சென்று முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெங்களூர் கிராமப்புறம், பெங்களூர் தெற்கு உட்பட மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்த விசிக வேட்பாளர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.
இன்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சந்தித்து விசிக காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று தெரிவித்தேன்.
விசிக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர்களான டி.கே.சுரேஷ், சவுமியா ரெட்டி ஆகியோருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்யவுள்ளேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடகா அரசை குறை கூற பாஜகவுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த 5 உத்தரவாதங்களை மாநில அரசு முறையாக செயல்படுத்தி வருகிறது. இந்த உத்தரவாதங்கள் மக்களை, குறிப்பாக பெண்களை சென்றடைந்துள்ளன. மக்கள் ஆதரவு காங்கிரஸுக்கு பலமாக இருப்பதால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அந்த பிரச்சினையை பாஜக கையில் எடுத்துள்ளது” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சாம்சங் போன்களின் டிஸ்ப்ளேவிலும் பச்சை கோடு… அதிர்ச்சியில் பயனாளர்கள்!
அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!