ADVERTISEMENT

மின்னம்பலம் மெகா சர்வே: சிதம்பரம்… மக்கள் மனதின் ரகசியம் என்ன?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சந்திரகாசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ஜான்சிராணி போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

விசிக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

ADVERTISEMENT

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்

ADVERTISEMENT

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரியலூர்,  ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம்,  காட்டுமன்னார்கோயில் (தனி) மற்றும் குன்னம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் சிதம்பரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜான்சிராணி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, சிதம்பரம் தொகுதியில் இந்த முறையும் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்று மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com  வலைதளத்தில்

சிதம்பரம் மக்கள் மனசின் ரகசியம் என்ன? | Minnambalam Mega Survey 2024 | Chidambaram | Elections 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: திருநெல்வேலி… மக்கள் தீர்ப்பு என்ன?

மின்னம்பலம் மெகா சர்வே: கன்னியாகுமரி… வெற்றிச் சங்கமத்தில் யார் அலை?

மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை… தன் சென்னை ஆக்குவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: கன்னியாகுமரி… வெற்றிச் சங்கமத்தில் யார் அலை?

மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்?

மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர்… பட்டாசு கொளுத்துவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி?

மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share