விசிக-வின் மனித சங்கிலி போராட்டம்: ஆதரவளித்த கட்சிகள்!

Published On:

| By Jegadeesh

இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு , அம்பேத்கர் பிறந்த நாள் நூற்றாண்டு, விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகம் முழுவது 50 இடங்களில் அணிவகுப்பு நடத்தவுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த அணிவகுப்பிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகளும் பங்கு பெற வேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.

vck calls human chains protest

இந்நிலையில், சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொள்வோம் என்று அறிவித்திருந்தன.

ADVERTISEMENT

தற்போது, மே 17 இயக்கம் , நாம் தமிழர் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா,

ஆகிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” : பிஎஃப்ஐ தமிழக தலைவர்!

ரவுடி மீது துப்பாக்கிச் சூடு: தாம்பரம் காவல் ஆணையர் விளக்கம்!

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share