துணிவு வாரிசு ரிலீஸ்: ஆரவாரம் செய்த ரசிகர்கள்!

Published On:

| By Selvam

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் இன்று (ஜனவரி 11) திரையரங்குகளில் வெளியானது.

கடந்த 2014-ஆம் ஆண்டு விஜய், அஜித் நடித்த ஜில்லா, வீரம் படங்கள் பொங்கலுக்கு வெளியானது. அதன்பிறகு இரண்டு நடிகர்களும் நடித்த படங்கள் நேரடியாக வெளியாகவில்லை.

இந்தநிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தல, தளபதி படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

அதன்படி, அஜித் நடித்த துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கு சிறப்பு காட்சிகளுடன் துவங்கியது. அதேபோல, வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் திரையரங்கு முன்பாக அஜித் மற்றும் விஜய்க்காக கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்தனர். மேலும் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் துணிவு, வாரிசு திரைப்படங்களை கொண்டாடினர்.

இரண்டு திரைப்படங்களுக்கும் சமூக வலைதளங்களில் தற்போது நேர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.

செல்வம்

முதல் ஒருநாள் போட்டி : இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை

திருப்பதி: சொர்க்கவாசல் தரிசனம் இன்றுடன் நிறைவு – நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share