வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபலி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும் குஷ்பு, சங்கீதா, பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
பொங்கல் கொண்டாட்டமாகத் திரைக்கு வரவுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு (soul of varisu) என மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கண்ட மூன்று பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. என்னதான் தொடர்ந்து வாரிசு படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
காரணம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு விஜய் பட இசை வெளியீட்டு விழா நடைபெறாமலே இருந்தது. கொரோனா பரவல் காரணமாக விஜய்யின் பீஸ்ட படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராஜு ஜெயமோகன் வாரிசு இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் எனவும் அந்த இசை வெளியீட்டு விழாவை தான் தொகுத்து வழங்க உள்ளதாகவும் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த ட்விட்டர் பதிவை அவர் அழித்து விட்டார்.
தற்போது, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதியை அதிகாரப்பூர்வமாக ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இதற்காக புரோமோ வெளியிட்டுள்ளது. அதில் ”இரண்டு வருடங்களுக்குப் பிறகு ‘தி பாஸ் ரிட்டர்ன்ஸ்’. 2 வருடங்களுக்குப் பிறகு தளபதியின் குட்டி ஸ்டோரியை கேட்கத் தயாராகுங்கள். சீ யூ சூன் நண்பா என புரோமோ வெளியிட்டுள்ளது.
மோனிஷா
கூவத்தூர் முதல் பொதுக்குழு வழக்கு வரை : கொட்டித்தீர்த்த ஓபிஎஸ்