”என்கவுண்டரா? நான் நல்லபிள்ள.. என்னால இல்ல தொல்ல” டி.ஆர். பாணியில் புலம்பிய வரிச்சியூர் செல்வம்

Published On:

| By christopher

varichiyur selvam shocking news on his encounter

”நான் கோவை சென்றே 13 ஆண்டுகள் ஆகிறது. எதற்கு என்கவுண்டர் உத்தரவு என்று தெரியவில்லை” என பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் அதிர்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளார். varichiyur selvam shocking news on his encounter

மதுரை மாவட்டம் வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், கோவையில் கட்டப்பஞ்சாயத்து ஒன்றுக்காக தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்குமாறு போலீசாருக்கு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் அவரை பிடிக்க தனிப்படையினர் கோவையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மதுரை கருப்பாயூரணியில் உள்ள தனது இல்லத்தில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து அதிர்ச்சியுடன் அவர் பேட்டி அளித்தார்.

எந்த பிரச்சனைக்கும் செல்வது இல்லை! varichiyur selvam shocking news on his encounter

அவர் கூறுகையில், “என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டுள்ள செய்தி உங்களை விட எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. என்னக் காரணம் என்றே தெரியவில்லை.

நான் கோவை பக்கம் சென்றே 13 வருடம் ஆகிறது. காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக வாழ்ந்துட்டு வருகிறேன். நான் எங்கே சென்றாலும் என்னை பின் தொடர்ந்து வரும் காவலர்களுக்கு, அதுகுறித்த தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பி வருகிறேன்.

இப்போது நான் எந்த பிரச்சனைக்கும் செல்வது இல்லை. பேரன் பேத்திகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன்.

காவல்துறைக்கு புகழாரம்! varichiyur selvam shocking news on his encounter

இப்போது உள்ள காவல்துறை தவறு செய்தால் விடுவது கிடையாது. தப்பு செய்தவர்களை விரட்டி சென்று பிடித்து காலை உடைப்பார்கள், காலில் சுடுவார்கள் இல்லையென்றால் சுட்டுவிடுவார்கள்.

மனிதர்களாய் இருக்கும் வரை நடவடிக்கை தேவை இல்லை. ஆனால் மிருகமாகிவிட்டால் அப்போது தண்டித்து தானே ஆக வேண்டும். என் மீது ஒன்றும் காவல்துறை செய்யாத குற்றத்திற்கு வழக்கு போடவில்லை. செய்த தவறுக்கு தான் வழக்கு போட்டுள்ளார்கள். அதில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றம் முடிவு செய்யும்” என வரிச்சியூர் செல்வம் தெரிவித்தார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share