தமிழகத்தில், பயணிகளிடையே போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தால், ஒரு ரயில் நிலையமே மூடப்படவிருக்கிறது.
தமிழகத்தின், கரூர் – சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் தான் மூடப்படவிருக்கும் அந்த ரயில் நிலையம். இது இன்று (ஜனவரி 25) முதல் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, மோனூர் – கரூர் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாகவும் இதன்படி, வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு அந்த ரயில் நிலையத்தில் பயணச்சீட்டும் வழங்கப்படாது, வேறு எங்கிருந்தும் இந்த ரயில் நிலையத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
