டாம் க்ரூஸ் Varalaxmi Sarathkumar in Forty Plus
திரையுலகில் ஒரு பெண் நடிகையாக ஜொலிக்க வேண்டுமானால் பதினைந்து வயதுக்குள் அதற்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும். இருபதுகளில் புகழேணியில் ஏற வேண்டும். எட்டு திசைகளிலும் சுமார் பத்தாண்டுகள் வரை ஓடியாடி உழைத்துவிட்டு ஓய்வை அறிவித்துவிட வேண்டும். தேவைப்பட்டால் இரண்டொரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிற்சில பாத்திரங்களில் தலைகாட்டி கேரியரை தொடரலாம். சில காலம் முன்புவரை இப்படியொரு சித்தாந்தம் தமிழ் திரையுலகிலும் நிலவி வந்திருக்கிறது.
ஐம்பது, அறுபதுகளில் மேற்சொன்ன சித்தாந்தம் தீவிரமாகப் பின்பற்றப்படாதபோதும், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நடிகைகளுக்குப் பெரியளவில் புகழை ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எண்பதுகளில் அது இன்னும் கடினமாகிப் போனது. சுமார் 13 முதல் பதினெட்டு வயதுக்குள்ளாகவே நடிக்கும் வாய்ப்பை எட்டிவிட வேண்டும் என்ற நிலை இருந்தது.
கடந்த நாற்பதாண்டுகளில் மெல்ல அந்தச் சிந்தனை கரைந்து, இன்று வேறொரு கரைக்கு நகர்ந்திருக்கிறது திரையுலகம். ’இருபத்தைந்திலும் ஒருவர் நாயகி ஆகலாம். அதன்பிறகும் சில ஆண்டுகள் அந்த ‘புகழ் வெளிச்சத்தைப்’ பெற முடியும்’ என்று உணர்த்தி வருகிறது.
இந்தி திரையுலகில் தற்போது நடித்துவரும் அனன்யா பாண்டே, ஷ்ரத்தா கபூர், க்ரித்தி சனோன், ஜான்வி கபூர், கியாரா அத்வானி, ம்ருணாள் தாகூர் உள்ளிட்ட பலர் முப்பதைத் தொட்டவர்கள்; திருமணமாகி இருபதாண்டுகள் ஆனபிறகும் நாயகியாகவே தலைகாட்ட விரும்புபவர்கள் என்று அங்கு இன்னொரு பட்டியல் இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகிலும் தற்போது அந்த நிலைமை பாவத் தொடங்கியிருக்கிறது. Varalaxmi Sarathkumar in Forty Plus
ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா லட்சுமி, சாய் பல்லவி, பிரியங்கா மோகன் என்று குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நாயகிகள் சிலர் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து திரையுலகில் இயங்கி வருகின்றனர். Varalaxmi Sarathkumar in Forty Plus
அவர்களில் ஒருவராகத் திகழும் வரலட்சுமி சரத்குமார் நாற்பது வயதைப் பூர்த்தி செய்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயம். Varalaxmi Sarathkumar in Forty Plus
இருபத்தைந்தில் தொடக்கம்! Varalaxmi Sarathkumar in Forty Plus
நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயா தேவியின் மூத்த மகள் வரலட்சுமி. 1985இல் பிறந்த இவர் எம்பிஏ படித்தவர். அது மட்டுமல்லாமல் பாலே உட்பட மேற்கத்திய நடன வகைகளைக் கற்றுத் தேர்ந்தவர். மும்பையிலுள்ள அனுபம் கெர் நடிப்புப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்.
இந்த அனுபவங்களைப் பெறுவதற்கு முன்பாகவே, சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வரலட்சுமியைத் தேடி வந்திருக்கின்றன. பாய்ஸ், காதல் உள்ளிட்டவை அப்படிப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஆனால், தந்தை சரத்குமாரின் வற்புறுத்தலால் அவற்றுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் வரலட்சுமி. Varalaxmi Sarathkumar in Forty Plus
அந்த காலகட்டத்தில், தனது மகள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று சரத்குமார் விரும்பியதே அதற்குக் காரணம். Varalaxmi Sarathkumar in Forty Plus
அதன்பின்னர், ஒருகட்டத்தில் ‘நடிப்பில் முழுமூச்சாக இறங்கப் போகிறேன்’ என்று வரலட்சுமி தெளிவுற விளக்கியிருக்கிறார். பிறகு தாய் மற்றும் தந்தையின் ஒப்புதலோடு திரையுலகில் காலெடுத்து வைத்கிருக்கிறார்.
சரியாகச் சொல்லப்போனால், தனது இருபத்தைந்தாவது வயதில் ‘போடா போடி’யில் நடித்தார் வரலட்சுமி. சில ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த அப்படம் 2012இல் வெளியானது.

’முழுக்க நகர்ப்புறப் பெண்ணாக’ அப்படத்தில் அவர் வெளிப்பட்டிருந்தார். அது மட்டுமல்லாமல், ‘டீன் ரொமான்ஸ் படமாக’ போடா போடி கொண்டாடப்படவில்லை. ஒரு ஆண், பெண் பெற்றோராக மாறுகிற அனுபவங்களையே அப்படம் பேசியது. அதனால், ’ரொம்பவே சீரியசான படம்’ என்ற பெயரைப் பெற்றது.
போடா போடியில் கிடைத்த பெயரையும் புகழையும் துறந்துவிட்டு, ஒருமுழுமையான கமர்ஷியல் பட நாயகி எனும் அந்தஸ்தைப் பெற விரும்பினார் வரலட்சுமி. அந்த வகையில் அவர் நடித்த திரைப்படம், சுந்தர்.சியின் ‘மதகஜராஜா’. அப்படமோ சுமார் 12 ஆண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு கடந்த பொங்கலன்று வெளியாகி ‘பிளாக்பஸ்டர்’ வெற்றியை ஈட்டியது.

அதனால், ‘போடா போடி’க்குப் பிறகு ‘மாணிக்யா’ என்ற கன்னடப் படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக நடித்தார் வரலட்சுமி. ’கஸாபா’ எனும் மலையாளப் படத்தில் மம்முட்டியோடு மல்லுக்கு நின்றார். ‘தாரை தப்பட்டை’யில் பாலாவின் நாயகியாக உருமாறி நின்றார். மேற்சொன்ன படங்களே, வரலட்சுமி தேர்ந்தெடுத்த பாதை எவ்வாறு அமைந்தது என்பதை விளக்கிவிடும். அவற்றால் அவருக்குப் பெயர் கிடைத்ததே தவிர, தொடர்ந்து நாயகியாக நீடிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டவில்லை.
சிறப்பான பாத்திரங்கள்! Varalaxmi Sarathkumar in Forty Plus
‘நாயகியாக மட்டுமே நடிப்பது’ என்ற கொள்கை சரிப்பட்டுவராது என்பதைத் தனது அனுபவங்களில் இருந்து புரிந்துகொண்டார் வரலட்சுமி. அதன் காரணமாக, தனித்துவமான கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார்.
’சிறிய பாத்திரங்கள் என்றபோதும், திரைக்கதையில் தனக்கான இடம் தனியாக இருக்குமா’ என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார். Varalaxmi Sarathkumar in Forty Plus
எதிரே நடிப்பவர்கள் இளைய தலைமுறையினரா, மூத்த கலைஞர்களா என்பதைப் பற்றியெல்லாம் அவர் சிந்திக்கவே இல்லை. போலவே, ஒரேமாதிரியான பாத்திரங்களாக வந்தபோதும் அவற்றைத் திரையில் வேறுபடுத்திக் காட்டுகிற வித்தையை அவர் கற்றுத் தேர்ந்திருந்தார்.
அதன் பலனாக விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, காட்டு, மிஸ்டர் சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல் என்று தொடர்ந்தது வரலட்சுமியின் ஆட்டம். இவற்றில் சிலவற்றில் அவர் வில்லியாகத் தோன்றியிருந்தார்.
தன்னை முன்னிலைப்படுத்துகிற, நாயகிகளை முதன்மையாகக் கொண்ட கதைகளுக்கும் வரலட்சுமி முக்கியத்துவம் தரத் தொடங்கினார். வெல்வெட் நகரம், டேனி, எச்சரிக்கை, சேஸொம்க், சிங்க பார்வை போன்றவற்றை அதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.
கொன்றால் பாவம், ஹனுமான் போன்ற படங்களில் வரலட்சுமி நடித்த பாத்திரங்கள் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அவரது நடிப்புத் திறமையை அறிந்து, அப்படங்கள் அதற்கேற்ற காட்சிகளைக் கொண்டிருக்கும்.
அப்படங்களில் தன்னைச் சிறப்புற வெளிப்படுத்தியிருப்பார் வரலட்சுமி. அதுவே விஜய்யின் அடுத்த படமான ‘ஜனநாயகன்’னிலும் அவரை இடம்பெற வைத்திருக்கிறது.
கடந்துபோன ஆண்டுகளில் தனது வயது குறித்து வரலட்சுமி கவலைப்பட்டுச் சிந்தித்ததாக எந்தத் தகவலும் இல்லை. ‘அதற்குத் தேவையே இல்லை’ எனும் வகையில் தொடர்ந்து தனது உடல் திறனில், அழகில், சிந்தனைத் தெளிவில் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி சரத்குமார். தந்தையைப்போன்றே பிட்னஸில் பெருங்கவனத்தைச் செலவழிக்கிறார்.
சமகாலச் சமூகம், இணைய பயன்பாடு உட்படப் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கிற பாங்கு அவரிடத்தில் இருக்கிறது. திரையுலகம் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல், பொதுவெளியிலும் இன்று ‘போல்டு லேடி’யாக அறியப்படுகிறார் வரலட்சுமி.
வெறுமனே ‘பிஆர்’ நடவடிக்கைகளால், இணையவழிக் குழுக்களிடம் அது சார்ந்த பொறுப்பை ஒப்படைப்பதால் மட்டும் அப்படிப்பட்ட பிம்பத்தைக் கட்டமைத்துவிட முடியாது. அப்படிப்பட்ட தன்மை இயல்பில் வேராக இருந்தால் மட்டுமே, ஒரு விருட்சமாக அதனை வளர்த்தெடுக்க முடியும். அந்த வகையில் ஒரு முக்கியமான திரையாளுமையாகவும் உருவெடுத்திருக்கிறார் வரலட்சுமி.
இன்று, அவர் தனது நாற்பதாவது வயதைப் பூர்த்தி செய்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்விலும் சில சிறப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார்.
’வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது’ என்ற வாசகத்தில் எத்தனை சதவிகிதம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இருபத்தைந்தில் நாயகி அந்தஸ்தை பெற்ற வரலட்சுமி திரையுலகில் அடுத்தடுத்த நிலைகளை அடைவதற்கான தெளிவையும் பொறுமையையும் இப்பருவம் தருமென்று நம்பலாம்.

நாயகியா, வில்லியா, குணசித்திர பாத்திரமா என்பதைத் தாண்டி, சமூகத்தின் அங்கமாக உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் நம்பிக்கை தருகிற படைப்புகளில் அவர் இடம்பெற வேண்டும். அதற்கான முன்னுதாரணங்களாக, இன்று இந்திய அளவில் பல நடிகைகள் இருந்து வருகின்றனர். அந்தப் பாதையில் பயணித்து, இன்னும் பல ஆண்டுகள் வரலட்சுமி ரசிகர்களை ‘எண்டர்டெய்ன்’ செய்ய வேண்டும். நாற்பது ப்ளஸ் நாயகிகள் பட்டியலில் தனித்துவமான அடையாளத்தை அவர் அமைத்துக்கொள்ள வேண்டும்..