வரலெட்சுமி திருமணம்: ஸ்டாலினை நேரில் அழைத்த சரத்குமார்

Published On:

| By indhu

Varalakshmi's wedding: Sarathkumar invited Stalin in person

முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மகள் வரலெட்சுமியின் திருமண அழைப்பிதழை குடும்பத்தினருடன் நடிகர் சரத்குமார் இன்று (ஜூன் 8) வழங்கினார்.

நடிகை வரலெட்சுமியின் திருமணம்

தமிழ் சினிமாவில் திறமையான நாயகிகளில் ஒருவரான நடிகை வரலெட்சுமி சரத்குமார் கதாநாயகி, வில்லி மற்றும் பல குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், வரலெட்சுமிக்கு கடந்த மார்ச் மாதம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவருடன் குடும்பத்தார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர்.

பிரபலங்களுக்கு திருமண அழைப்பு

தற்போது, வரலெட்சுமி-நிக்கோலஸ் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரைப் பிரபலங்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு திருமண அழைப்பிதழை சரத்குமாரின் குடும்பம் வழங்கி வருகிறது.

அந்த வகையில், உலக நாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து சரத்குமாரின் குடும்பம் வரலெட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கியது.

தொடர்ந்து, நேற்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்து வரலெட்சுமியும், ராதிகாவும் திருமண அழைப்பிதழை வழங்கினர்.

முதல்வருக்கு திருமண அழைப்பு

Varalakshmi's wedding: Sarathkumar invited Stalin in person

இந்நிலையில், இன்று (ஜூன் 8) சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சரத்குமார், ராதிகா, வரலெட்சுமி ஆகியோர் வரலெட்சுமி – நிக்கோலஸ் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சஞ்சு சாம்சனுடன் பிரச்சனையா? – போட்டுடைத்த ரிஷப் பண்ட்

பெகாசஸ் விவகாரம்: சந்திரபாபு நாயுடு மகனின் திடீர் கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share