ரிலாக்ஸ் டைம்: வரகரிசி உப்பு சீடை!

Published On:

| By Balaji

ரிலாக்ஸ் டைமில் சாப்பிட மைதா, ரவை, கோதுமை மாவில் செய்யும் வழக்கமான ஸ்நாக்ஸ் அயிட்டங்களைக் காட்டிலும் சிறுதானியங்களில் செய்யும் கொறிக்கும் உணவு வகைகள் சுவை நிறைந்தவை. ஊட்டச்சத்து மிக்கவை. அனைவருக்கும் ஏற்றவை. அதற்கு இந்த வரகரிசி உப்பு சீடை உதவும்.

**எப்படிச் செய்வது?**

ADVERTISEMENT

கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் இரண்டு கப் வரகரிசி மாவைச் சலித்து இரண்டு நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். அரை கப் உளுந்தை இரண்டு நிமிடங்கள் வறுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வரகரிசி மாவு, உளுந்து மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பிறகு, அரை டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கையால் கிளறவும். இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போடும் போது வெடிக்காமல் இருக்க அதில் ஊசியால் ஒரு ஓட்டை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து தேவையானபோது சாப்பிடலாம்.

**சிறப்பு**

ADVERTISEMENT

நார்ச்சத்து அதிகம் கொண்ட கொழுப்பைக் கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் வரகரிசியில் அதிகம் நிறைந்துள்ளன. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share