வந்தே பாரத் ரயில் பயணம் என்பது பெரும்பாலான மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. குளிர்சாதன வசதி, அதிவேகமான பயணம் என பல சிறப்பான வசதிகளை கொண்ட இந்த ரயிலில் அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்வது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருக்கிறது.
இந்த ரயிலில் உள்ள சொகுசு வசதிகளுக்கு ஏற்ப இதன் பயண கட்டணமும் அதிகமாக இருப்பதால் அனைத்து மக்களும் வந்தே பாரத் ரயிலை பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய ரயில்வே நிர்வாகம் குறைந்த கட்டணத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் குளிசாதன வசதி இல்லாத வந்தே பாரத் சாதாரண ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களுக்கு இணையாக இந்த வந்தே பாரத் சாதாரண ரயிலானது இயங்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
தற்போதுள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் தொலைதூர நகரங்களை இணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில், சென்னையில் மட்டுமே இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
1. சென்னை – மைசூர் (பெங்களூர் வழி)
2. சென்னை – கோயம்புத்தூர் (ஈரோடு வழி)
அடுத்த கட்டமாக மேலும் இரண்டு நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது.
1. சென்னை – திருநெல்வேலி (மதுரை, திருச்சி வழி)
2. சென்னை – விஜயவாடா
இந்த இரண்டு நகரங்களுக்கும் விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் முயற்சியில் செயல்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் அனைத்து தரப்பினரையும் சென்றடையாததால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருவது தான் இந்த வந்தே பாரத் சாதாரண ரயில்.
வந்தே பாரத் சாதாரண ரயிலானது தற்போது இயக்கத்தில் இருக்கக்கூடிய குளிர்சாதன வந்தே பாரத் ரயிலில் சில மாற்றங்களை செய்து, சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்ஜின்கள் தயாரிக்கும் பணியானது சித்தரஞ்சன் ஆலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் சாதாரண ரயிலில் இடம்பெறுபவை:
• 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள்
• 12 மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள்
• 1 மாற்றுத்திறனாளிகள் பெட்டி
• 1 சரக்கு பெட்டி
மொத்தமாக 22 பெட்டிகள் இடம் பெறும் வகையில் இந்த வந்தே பாரத் சாதாரண ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் பயணம் செய்ய பயணச்சீட்டு முன்பதிவு செய்ய தேவையில்லை, பயண நேரத்திற்கு முன்னதாக நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ பெற்றுக்கொள்ளலாம்.
வந்தே பாரத் சாதாரண ரயிலில் முதற்கட்டமாக சில பெட்டிகளை மட்டும் தயாரித்து அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்த ரயிலானது அந்தியோதயா வந்தே பாரத் என்ற பெயரில், அந்தியோதயா ரயில்கள் வழிதடத்திலேயே இயக்கப்படும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
– பவித்ரா பலராமன்
“சீமானை கைது செய்ய வேண்டும்” – நடிகை விஜயலட்சுமி
சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை துணை மேயர்
Comments are closed.