ADVERTISEMENT

வன்னியர் சங்க மாநாடு… அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு!

Published On:

| By Kavi

Vanniyar Sangam conference

வன்னியர் சங்க மாநாடு இன்று நடைபெறவிருக்கும் நிலையில் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Vanniyar Sangam conference

மாமல்லபுரத்தில் இன்று (மே 11) வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவிருக்கிறது. இதற்காக மாநாட்டுத் திடலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கார்கள், வேன்கள், பேருந்துகளில் லட்க்கணக்கானோர் மாநாட்டு திடலை நோக்கி வந்துகொண்டிருப்பதால் இன்று ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆங்காங்கே பேரிகார்டுகளை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
 Vanniyar Sangam conference

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. முன்னதாக அம்பேத்கர் சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவிப்பது போன்ற விரும்பத் தகாத செயல்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. அதனால் போராட்டம் சாலை மறியல் ஆகியவையும் நடந்திருக்கின்றன.

இந்தசூழலில் தான் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுபோன்று முக்கிய சாலைகள் ஓரங்களில் உள்ள விசிக, பாமக கொடி கம்பங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Vanniyar Sangam conference

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share