வன்னியர் சங்க மாநாடு : 12 ஆண்டுகளுக்கு பின் கூடிய கூட்டம்… எவ்வளவு பேர் தெரியுமா?

Published On:

| By Kavi

வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு மாமல்லபுரம் திருவிடந்தையில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. Vanniyar Sangam Conference

இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டுக்கு காலை முதலே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினரும் சாரை சாரையாக வரத் தொடங்கினர். காலை 9 மணியில் இருந்தே பார்க்கிங்கில் வாகனங்கள் அணிவகுக்கத் தொடங்கின. பலர் தங்களது குடும்பத்தோடு வந்திருக்கிறார்கள்.

தமிழக முழுவதிலும் இருந்தும், கார், வேன், பேருந்துகள் என சுமார் 20 ஆயிரம் வாகனங்களில் புறப்பட்டிருக்கின்றனர். அதன்படி சுமார் 1.5 லட்சம் பேர் மாநாட்டுத் திடலில் குவிந்திருக்கின்றனர். சுமார் 50,000 பேர் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநாட்டு திடலுக்கு வர முடியாமல் பாதி வழியிலேயே தடைபட்டு நின்றனர்.

அதில் பலர் நேரமானதால் பாதி வழியிலேயே வீடுகளுக்கு திரும்பினர். அந்தவகையில் இந்த மாநாட்டுக்காக சொந்த ஊர்களில் இருந்து சுமார் 2,00,000 பேர் கிளம்பியிருக்கிறார்கள்” என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. Vanniyar Sangam Conference

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share