வனிதா 4-வது திருமணம் செய்யவில்லை… எதற்காக அப்படி செய்தார்?

Published On:

| By Kumaresan M

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். குக் வித் கோமாளி, பிக் பாஸ் தமிழ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார்.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான இவர்,முதலில் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு ஒரு மகனும் உள்ளார். பின்னர் மனக்கசப்பு காரணமாக அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவதாக ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். இரு மகள்கள் பிறந்த பிறகு,  இந்த திருமண உறவும் விவாகரத்தில் முடிந்தது. பின்னர், 2022ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். அதுவும் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. பீட்டர் பால் இறந்த சமயத்தில் தான் அவரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை என்று வனிதா கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், வனிதா  டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் இருக்கும் போஸ்ட்டரை பார்த்து ரசிகர்கள் வியந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், நடிகை வனிதா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு அது திருமணம் இல்லை… படத்தின் ப்ரோமோஷன் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். வனிதா இயக்கி இருக்கும் MR & MRS படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இப்படி செய்துள்ளனர். இந்த படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் இணைந்து நடித்து உள்ளனர். ஏற்கனவே, இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் தகவல் உண்டு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 மெரினாவிற்கு வந்த நேதாஜி

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் : கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share