நாடாளுமன்ற மக்களவையில் வந்தே மாதரம் பாடல் வெளியாகி 150-வது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சிறப்பு விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்:
- ஆங்கிலேயர் ஆட்சியில் பிரிட்டிஷ் மகாராணியாரை கடவுள் காப்பாற்ற வேண்டும் என பாட நிர்பந்திக்கப்பட்டனர்; அதற்கு பதில் தரும் வகையில் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டது.
- வங்கத்தில் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்தது வந்தே மாதரம் பாடல்.
- ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பல் இயக்கி தேசப்பற்றை வளர்த்தவர் வ.உ.சிதம்பரனார்.
- தமிழ்க் கவிதைகள் மூலம் ஆங்கிலேய ஆட்சியாளர்களை அலறவைத்தவர் மகாகவி பாரதியார். (தாயின் மணிக்கொடி பாடலை பாடினார் மோடி)
- மகாத்மா காந்தியடிகள் வந்தே மாதரம் பாடலை 1905-ம் ஆண்டு புகழ்ந்தார்; நாட்டின் தேசிய கீதமாக வந்தே மாதரம் பாடல் இருக்க வேண்டும் என்பது காந்தியடிகளின் விருப்பம்.
- வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக வரலாற்றில் மிகப் பெரும் துரோகம் செய்யப்பட்டுள்ளது.
- இஸ்லாமியர்களுக்கு எதிராக வந்தே மாதரம் பாடல் இருக்கிறது என 1937-ம் ஆண்டு ஜின்னா குற்றம் சாட்டினர்; இதனை ஜவஹர்லால் நேரு ஆதரித்தார்.
- நேருவால்தான் வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக ஏற்கப்படாமல் போனது.
- ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி, வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் நடத்தியது. அப்போது நேருவும் காங்கிரஸ் கட்சியும் வந்தே மாதரம் பாடலை சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர்.
- வந்தே மாதரம் பாடல் பற்றி சுபாஷ் சந்திர போஸுக்கு நேரு எழுதிய கடிதத்தில், இந்த பாடல் முஸ்லிம்களை எரிச்சலூட்டச் செய்யக் கூடியது என குறிப்பிட்டுள்ளார்.
- வந்தே மாதரம் பாடல் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்த போது ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தோம்; அந்த பாடல் நிறைவடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த போது நாடு அவசர நிலையின் கோரப் பிடியில் சிக்கி இருந்தது; அப்போது தேசபக்தர்கள் சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டனர்.
- வந்தே மாதரம் பாடலின் மகத்துவத்தை தற்போது மீட்டெடுக்க நமக்கு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
