பயணிகளின் வசதிக்காகவும், கோடைக்காலத்தை முன்னிட்டும் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் இன்று (ஏப்ரல் 5) முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஏப்ரல் 5) 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகா்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்-06057) அதே நாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இன்று ( ஏப்ரல் 5) 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்) மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரயில் (06058) அதே நாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் கீரை கடையல்