கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்… சட்டமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக வானதி

Published On:

| By Selvam

கச்சத்தீவை திரும்பபெறக்கோரி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம், அதிமுக, பாஜக ஆதரவோடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 2) நிறைவேறியது. Vanathi Srinivasan take stand

இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை திரும்ப பெற வலியுறுத்தி, சட்டமன்றத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த தீர்மானம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய வானதி சீனிவாசன், “மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி திட்டத்தை மத்திய அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதில் இருந்து இந்த நடவடிக்கை தவறு என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மீனவர்களின் நலனில் பாஜக அரசு தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. எனவே, அந்த அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

அதேவேளையில், பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “முதலமைச்சர் ஸ்டாலினின் இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம். கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தை மறைந்த கலைஞர், கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.

ADVERTISEMENT

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக” என்றார்.

தொடர்ந்து அனைத்துக் கட்சி சட்டமன்ற தலைவர்களின் ஆதரவுடன் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை, விமர்சித்துள்ள நிலையில், வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Vanathi Srinivasan take stand

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share