ADVERTISEMENT

மறுஜென்ம கதையாக வனம்

Published On:

| By Balaji

ஸ்ரீகந்தன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வனம். இதன் டிரைலரை சசிகுமார், மஞ்சுவாரியர், சேரன் உள்ளிட்ட 24 திரைப்பிரபலங்கள் நேற்று( 27.10.2021) சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.

மறுஜென்மத்தை மையமாக வைத்து பேண்டஸி த்ரில்லர் கலந்த கதையாக இந்த படம் உருவாகி உள்ளதை உணர்த்துகிறது டிரைலர். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படக்கூடியதாக இருக்கும். அதற்கேற்றவாறு படத்தின் டிரைலரிலேயே காட்சி அமைப்புகள் சிறப்பாக வந்துள்ளதை உணரமுடிகிறது. குறிப்பாக டிரைலரின் முடிவில் வனம் தொடர்பான டாப் ஆங்கிள் காட்சி அருமையாக உள்ளது.

ADVERTISEMENT

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள விக்ரம் மோகன் கூறுகையில், ‛‛இயக்குனருடன் ஏற்கனவே அறிமுகம் உள்ளதால் இப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முன்பே லொகேஷன் பார்த்து திட்டமிட்டதால் படப்பிடிப்பு எளிதாக இருந்தது, படம் நிச்சயம் பேசப்படும்” என்றார்.

**-இராமானுஜம்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share