நெல்லை : திருமணத்துக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து!

Published On:

| By Kavi

நெல்லையிலிருந்து இன்று (செப்டம்பர் 3) ராஜபாளையத்திற்குத் திருமண நிகழ்வுக்காகச் சென்ற வேன் ராமையன்பட்டி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நெல்லை, பேட்டை, ரஹமத் நகர் பகுதியை சேர்ந்த 13 க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜபாளையத்திற்குப் புறப்பட்டு சென்றனர்.

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் அமைந்துள்ள நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை கடந்து சங்கரன்கோவில் சாலையில் போலீஸ் காலனி அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே கவிழ்ந்தது.

இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கிய வேனிலிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் வேனிலிருந்த மும்தாஜ் ( 33 ), அப்துல்லா ஷேக்(30), மீரான் (8), பீர் பாத்தி( 60), பீர் மைதீன் (59), மைதீன் அப்துல் காதர் (63 ), முகமது ரியாஸ் (2), அகமது அஜ்மல் ( 2), கோதை (3), நூர்ஜகான் பீவி ( 85) உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக மானூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரவணன், நெல்லை

விமர்சனம் : லக்கிமேன்!

திமுகவுக்கு ஆதரவு, அண்ணாமலை தனித்துப் போட்டியிடுவாரா?: சீமான் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share