கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 5) ஒருநாள் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதனால் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
அத்துடன் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி உத்தரவிட்டுள்ளார்.
அதிகளவு மழை பெய்து வருவதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
மத்திய பிரதேசத்தில் கொடூரம்: பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த சம்பவம்!
