வால்பாறை : சிறுத்தை தாக்கி சிறுமி பலி!

Published On:

| By Kavi

வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி 6 வயது குழந்தை உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கோண்டா பகுதியைச் சேர்ந்தவர் அனுல் அன்சாரி. இவர் தனது இரண்டு மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் தேயிலை தோட்ட வேலைக்காக கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார்.

ஊசிமலை எஸ்டேட்டில் அவர் தங்கியிருந்த நிலையில் அன்சாரியின் மனைவி மற்றும் அவரது 6 வயது மகள் சிறுமி அப்சரா ஆகியோர் அருகில் உள்ள சிற்றோடை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது வனப்பகுதிக்குள் இருந்து வந்த சிறுத்தை ஒன்று சிறுமியை தூக்கிச் சென்றது. இதை பார்த்து சிறுமியின் தாய் கூட்டச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுத்தையை துரத்தினர்.

இதில் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை சிறுமியை விட்டுச் சென்றது.

அப்போது அங்கிருந்தவர்கள் சிறுமியை தூக்கி பார்த்ததில் அவருக்கு கழுத்து, தலை பகுதியில் கடுமையாக அடிபட்டிருந்ததும், அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இந்த தகவல் அறிந்து ஊசிமலைக்கு வந்த காவல்துறையினரும், வனத் துறையினரும் சிறுமியின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில் ஊசிமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், அங்கு வசிக்கும் மக்களுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிஎஸ்பி

மோடியே திராவிடர் தான்… அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா

‘வெல்கம் டு பிக் லீக்’ : சிவகார்த்திகேயன் குறித்து அஜித் சொன்ன வார்த்தை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share