நடிகை விஜயலட்சுமி அளித்த திருமண மோசடி புகாரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி ஆஜராக வளசரவாக்கம் போலீசார் இன்று (பிப்ரவரி 24) சம்மன் அனுப்பியுள்ளனர். Valasaravakkam police send summon
தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, சீமான் ஏமாற்றி விட்டதாகவும், அவரால் ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளேன் என்றும் நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ஆம் ஆண்டு புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகார் கொடுத்த சில மாதங்களில் வழக்கை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். அதேபோல 2023-ஆம் ஆண்டு சீமான் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகாரளித்தார். அந்த புகாரையும் வாபஸ் பெற்றார்.
இந்தநிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பிப்ரவரி 19-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், சீமான் மீதான பாலியல் வழக்கை 12 வாரங்களுக்குள் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, சீமானிடம் குரல் பரிசோதனை, ஆண்மை பரிசோதனை நடத்தி மூன்று மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக மின்னம்பலத்தில் இன்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமியை திருமண மோசடி செய்த வழக்கில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு சீமான் ஆஜராக போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். Valasaravakkam police send summon