“எடப்பாடியின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது”: வைத்திலிங்கம்

Published On:

| By Selvam

எடப்பாடி பழனிசாமி தரப்பின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த மனுவை நீதிபதி குமரேஷ் பாபு இன்று (மார்ச் 28) தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசியபோது,

ADVERTISEMENT

“இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவோம். இது தான் இறுதியான தீர்ப்பு என்று சொல்ல முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இயற்றிய சட்ட விதிகள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்காலிகமாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சி நீடிக்காது” என்று தெரிவித்தார்.

செல்வம்

ADVERTISEMENT

ஒரு கல்லூரியும் சில தீரமிக்க இளைஞர்களும்…  இதோ ஒரு சமகால சரித்திரம்!

“அதிமுக இனி ஒரே அணி தான்:” கே.பி.முனுசாமி

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share