வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Published On:

| By indhu

வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

ADVERTISEMENT

அதன்படி 15 நாட்களுக்கு 3 கட்ட தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 10-ந்தேதி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக 5 நாட்களில் மொத்தம் 915 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதே போல் சிவகங்கை மாவட்ட தேவைக்காக 4 நாட்களில் 376 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 21-ந்தேதி முதல் 6 நாட்களுக்கு மதுரை மாவட்ட தேவைக்காக 209 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் நீர்நிலைகளின் அருகே கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் எனவும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்.

ADVERTISEMENT

மேலும் காவல்துறையினர் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வங்கி கணக்கை முடக்குவதே பாஜகவின் திட்டம் – கெஜ்ரிவால் அட்டாக்!

“1% வாய்ப்பு…”: கோலியின் RCB இப்படி செய்வது இது முதல் முறை அல்ல!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share