ஐ.பி.எல் ஏலத்தில் 13 வயது வீரர்… யார் இந்த சூரியவன்ஷி?

Published On:

| By Kumaresan M

இந்திய 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பைக்கான அணியில்   13 வயதாகும் பிகாரைச் சேர்ந்த சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியும் தேர்வாகியுள்ள நிலையில் . ஐ.பி.எல் ஏலத்திலும் பங்கேற்கிறார்.

வரும் நவம்பர் 24,25 ஆம் தேதிகளில் 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க 574 வீரர்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. இதில், சூரியவன்ஷியும் இடம் பெற்றுள்ளார்.

பட்டியலில் 491வது வீரராக இவர் ஏலத்துக்கு வருகிறார். இவருக்கு அடிப்படை விலையாக 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்கும் இளம் வீரர் இவர்தான்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா 19 அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 3 இன்னிங்ஸ்களில் சிறப்பாக விளையாடியிருந்தார். இதில், ஒரு அரை சதமும் அடக்கம். சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சூரியவன்சிக்கு கிடைத்தது.

இதனால் பலரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர் ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அடுத்து வரும் யு19 உலகக்கோப்பை அணியிலும் இவர் இடம் பிடிக்க முடியும்.

பிகார் அணிக்காக இவர் ரஞ்சி டிராபியில் களம் இறங்கிய போது, இவருக்கு வயது 12 ஆண்டுகள் 284 நாட்கள்தான் ஆகியிருந்தது. உலகில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 8வது இளம் வீரராக இவர் கருதப்படுகிறார்.

9 வயதில் இருந்து இவர் கிரிக்கெட் விளையாடி வருகிறார். 10 வயதில் இருந்து  சீனியர் வீரர்களுடன் இவர் விளையாட ஆரம்பித்து விட்டார்.

தற்போது, சூர்வயன்ஷி  ஐ.பிஎல் தொடரில் ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதால், இவரை போன்ற திறமை வாய்ந்த இளம் வீரர்களை குறைந்த விலைக்கு வாங்கி பட்டை தீட்ட சில அணிகள் முயலலாம். அந்த வகையில், சூரியவன்ஷி போன்ற இளம் வீரர்களுக்கு இது தரமான வாய்ப்பு என்றே சொல்லலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

தனுஷ் – நயன்தாரா மோதல் : நானும் ரவுடிதான் படம்தான் காரணமா?

நயன்தாரா Vs தனுஷ்… நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share