இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு தேவனும் வடிவேலுவும் மீண்டும் இணைந்தனர்.
முதல் பாகத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கர் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க முன் வந்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுக்கும் தயாரிப்பாளராக இருந்த இயக்குநர் ஷங்கருக்கும் இடையே மோதல் உருவானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தும், எந்த தீர்வும் கிடைக்காததால், வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு ஓரளவு அந்த பிரச்சனைகள் தீர்ந்த பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
ஆனால் அந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்க வில்லை. அதன் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு பகத் பாசல் ஆகியோர் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படம் நடிகர் வடிவேலுக்கு பல பாராட்டுகளை பெற்று தந்தது.
மாமன்னன் வெற்றியை தொடர்ந்து வடிவேலு சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக மீண்டும் பகத் பாசிலுடன் இணைந்து மாரிசன் என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். ஆனால் மாரிசன் படத்திற்கு பிறகு வடிவேலு கைவசம் பெரிய அளவில் எந்த படங்களும் இல்லை என்று கூறப்படுகிறது.
பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் வடிவேலு சின்னத்திரை பக்கம் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமையலை மையப்படுத்திய ஒரு புதிய ரியாலிட்டி ஷோ தொடங்க உள்ளது. அந்த ரியாலிட்டி ஷோவில் நடிகர் வடிவேலு கலந்துகொள்ள போகிறார் என்றும், அது குறித்த அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சமையல் ரியாலிட்டி ஷோவில் நடிகர் வடிவேலு கலந்து கொள்ள ஒரு எபிசோடுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!
AK Birthday : சர்ப்ரைஸ் செய்த ஷாலினி.. ரீ ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்!
–