வைகைப்புயல் வடிவேலு நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு நடித்துள்ளார். வடிவேலு நடித்திருந்த நாய் சேகர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் மற்றும் விஜெ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகராக மட்டும் அல்லாமல் இந்த படத்தில் இருந்து வெளியான “எங்க அப்பத்தா, ஓ மை காட்” ஆகிய இரண்டு பாடல்களை வடிவேலு பாடியுள்ளார்.
இந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் அறிவிப்பு வெளியானது முதலே படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இத்திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரெய்லர் இன்று (டிசம்பர் 1) வெளியாகியுள்ளது.
வித்தியாசமான தோற்றத்திலும், இந்தியாவின் முதல் நாய் கடத்தல்காரராகவும் வடிவேலு இந்த படத்தில் நடித்துள்ளார். வடிவேலு ஒரு கேங்க் அமைத்து ஊரில் உள்ள அனைத்து நாய்களையும் திருடுவது போல டிரெய்லர் அமைந்துள்ளது.
”தம்பி இன்னும் ஜூஸ் வரல”, “தில்லு இருக்கவ மட்டும் நில்லு, பயப்படுறவன் பம்புறவன் எல்லாம் பறந்து ஓடிடு”, ”ஆக்ஷன் பிளாக் ஸ்டார்ட் ஆகிடுச்சி, காமெடியன்ஸ்லாம் தூரமா போங்க” ஆகிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
மோனிஷா