ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த ‘பிரமயுகம்’ மற்றும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி இருக்கின்றன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
பிரமயுகம்
மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வெளியான ‘பிரமயுகம்’ திரைப்படம் இன்று (மார்ச் 15) சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது. முழுவதும் கருப்பு வெள்ளையில் வெளியான இப்படத்தில், கொடுமன் போட்டியாக மம்முட்டி அசத்தலான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.
குறைவான கதாபாத்திரங்களை வைத்து ஒரு நல்ல திரில்லர் படத்தினை ராகுல் சதாசிவன் அளித்துள்ளார். குறைவான பட்ஜெட்டில் கதையை நம்பி எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூபாய் 9௦ கோடியை வசூலித்து இருக்கிறது. ஹாரர் விரும்பிகளுக்கு ஏற்ற ஒரு தரமான திரில்லர் படம் என்பதால் ஓடிடியில் நிச்சயம் பார்க்கலாம்.
வடக்குப்பட்டி ராமசாமி
காமெடியை மையமாக வைத்து கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் சந்தானத்திற்கு ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. சந்தானம், மாறன், சேசு கூட்டணியின் காமெடியால் இப்படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
நீண்டநாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ இன்று ‘அமேசான் பிரைம்’ மற்றும் ‘ஆஹா’ என இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கிறது. நகைச்சுவை சற்று தூக்கலாக இருப்பதால் வாரயிறுதியை இந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உடன் கொண்டாடலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக – காங்கிரஸ் கூட்டணியின் தலைக்கணம் துடைத்தெறியப்படும்: மோடி காட்டம்!