விரைவில்  வட சென்னை 2: வெற்றி மாறன் அப்டேட்!

Published On:

| By Kavi

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த படம் விடுதலை. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடுதலை 2 படத்தை முடித்த பிறகு வெற்றி மாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க தயாராக உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கிய  விடுதலை படம் திரையிடப்பட்டது. அந்த படத்திற்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது.

மேடையில்  வெற்றிமாறன் விருது பெற்ற உடன் ரசிகர்கள் அவரிடம் வடசென்னை படம் குறித்த அப்டேட்டை கேட்கத் தொடங்கினார்கள்.

ரசிகர்களின் கேள்விக்கு விரைவில் வட சென்னை 2 படம் வெளியாகும் என்று தெரிவித்தார். வெற்றி மாறனின் இந்த பதில் ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

IPL 2024: விலகும் பாண்டியா? மீண்டும் கேப்டனாகும் ரோகித்?

ஒரே நாளில் இரண்டு மடங்காக உயர்ந்த கொரோனா தொற்று!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share