குரங்கு அம்மைக்கு எதிராக 40000 தடுப்பூசிகள்!

Published On:

| By admin

உலகில் 250க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை நோய் தொற்றை கண்டறிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவுகிறது. இந்நிலையில்
ஜெர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு 40,000 டோஸ் பவேரியன் நோர்டிக் தடுப்பூசியை ஜெர்மனி அரசு கோரியுள்ளது.

இதுகுறித்து பேசிய ஜெர்மன் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக், “இந்த நோய் தொற்று மேலும் பரவினால், எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்க விரும்புகிறோம். குரங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும், மேலும் இது ஒரு புதிய தொற்றுநோயின் தொடக்கம் போல தெரியவில்லை. இதை ஆரம்பத்திலேயே கையாளுவது சிறந்த முறையாக இருக்கும். இதுவரை, ஜெர்மனியில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.” என்று கூறினார்.

ADVERTISEMENT

மேலும், “பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்சம் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் நோய் தொற்று பரவாமல் இருக்க உறுதியளிக்கும்.” என்று கூறினார். அமெரிக்க சுகாதார அதிகாரிகள், இந்த வாரம் தேசிய கையிருப்பில் பவேரியன் நோர்டிக் தடுப்பூசியின் 1,000க்கும் மேற்பட்ட டோஸ்கள் இருப்பதாகவும், வரவிருக்கும் வாரங்களில் அந்த அளவு மிக விரைவாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர். அங்கு பெரியம்மை மற்றும் குரங்கு காய்ச்சலுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த குரங்கு அம்மை தொற்றுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளுக்கு இம்வானெக்ஸ் தடுப்பூசி வழங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்காவில் உள்ள டேனிஷ் நிறுவனம் தெரிவித்தது.

ADVERTISEMENT

கடந்த திங்களன்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசிகள் தேவையில்லை, ஏனெனில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான பாலியல் நடத்தை போன்ற நடவடிக்கைகள் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.” என்று தெரிவித்திருந்தது.

Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share