சரக்கு வேனில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை… ‘வாழை’ படத்தின் எதிரொலியா? நடந்தது என்ன?

Published On:

| By christopher

Harsh action if people are loaded in cargo vans... nellai DIG order!

மூன்று பெண்கள் பலியானதை அடுத்து சரக்கு வேன், லாரிகளில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை சரக டிஐஜி இன்று (ஆகஸ்ட் 28) உத்தரவிட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு நெல்லையில் வாழைத்தார் சுமக்கும் கூலித் தொழிலாளர்கள் 19 பேர் பலியான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் ‘வாழை’ படத்தை இயக்கியுள்ளார்.

அண்மையில் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பார்ப்பவர்களின் மனதை உலுக்கியுள்ளது.

இந்த நிலையில் அதே போன்றதொரு சம்பவம் இன்று காலை தென்காசியில் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 3 பெண்கள் உயிரிழப்பு | nakkheeran

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இன்று காலை 20 விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுரண்டை – வாடியூர் சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில் ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) என மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 17 பேர் சிகிச்சைக்காக தென்காசி, ஆலங்குளம் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சரக்கு வேன், லாரிகளில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

SHARE MARKET : உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை – கவனம் செலுத்த வேண்டிய நிறுவனங்கள் என்னென்ன?

ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… வந்தாச்சு ஐ.என்.எஸ் நீலகிரி… ஸ்பெஷல் என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share