இந்தியாவில் இந்தி, தெலுங்கு,மலையாளம் மொழிகளில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் தயாராகும் படங்கள் ஒரே நாளில் வெளியாவது வாடிக்கை.
அதனை ஒரு வியாபாரமாக, ஆரோக்கியமான போட்டியாகவே தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் பார்க்கின்றனர்.
அந்த மொழியில் வெளிவரும் ஊடகங்களும், வழக்கமான சினிமா வெளியீடாகவே பார்க்கின்றன.
ஆனால் தமிழ் சினிமாவில் விஜய்-அஜித்குமார் நடிக்கும் படங்கள் குறிப்பிட்ட நாளில் வெளியாவதை இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போன்று சித்தரிக்கப்படுகிறது.

இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரம்பு மீறி சண்டைபோடுவது அன்றாட செய்தியாக நிகழ்ந்துவருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை கூட இருதரப்பு ரசிகர்களும், இயல்பான நட்புணர்வுடன், விளையாட்டாக ரசித்து பார்க்க தொடங்கி விட்டார்கள்.
ஆனால் அஜித்குமார்-விஜய் ரசிகர்கள் பட வெளியீட்டை யுத்த களமாகவே சித்தரிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த ஆர்வக்கோளாறை தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
அதனால்தான் என்னவோ விஜய்(வாரிசு) படம் பற்றிய ஒரு தகவல் வெளியானால் உடனடியாக அஜித்குமார்(துணிவு) படம் பற்றிய தகவலும் வெளியிடப்படுகிறது

இவை இயல்பாக நடந்தாலும் திட்டமிட்டு நடப்பதான தோற்றத்தை உருவாக்குகிறது. அஜித்குமார் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படங்கள் 2023 ஜனவரி 12 அன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இரு படங்கள் குறித்த புதிய அப்டேட்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.
வாரிசு படக்குழு அப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து, துணிவு படக்குழு அஜித்குமார் சம்பந்தமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர்.
இதையடுத்து நவம்பர் 3 அன்று வாரிசு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி ரஞ்சிதமே என்கிற பாடலை விஜய் பாடியுள்ளதாகவும், அதற்கான புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், துணிவு படக்குழு அப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி சில்லா சில்லா என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், அதற்கு வைஷாக் என்பவர் பாடல் வரிகளை எழுதி உள்ளதாகவும் இசையமைப்பாளர் ஜிப்ரான் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில்
அப்பாடல் பதிவின் போது அனிருத் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
ஆனால் அப்பாடல் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்த அறிவிப்பை ஜிப்ரான் அந்த பதிவில் குறிப்பிடவில்லை.
இராமானுஜம்
பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்தில் 4வது நாளாக ரெய்டு!
ஜூபைருக்கு எதிராக தமிழ்நாடு சைபர் க்ரைம் புகாரா?: உண்மை நிலவரம்!
