‘அமரன்’ குழுவுக்கு 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாணவர்!

Published On:

| By Minnambalam Login1

vaageesan amaran notice

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியானது.

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வசூல் ரீதியாகப் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

ADVERTISEMENT

பெரும்பாலான மக்கள் இந்த படத்தை கொண்டாடி வந்தாலும் சென்னையைச் சேர்ந்த மாணவர் வாகீசனால் இந்த படத்தைக் கொண்டாட முடியவில்லை.இதற்குக் காரணம் அந்த படத்தில் வந்த ஒரு காட்சிதான்.

‘அமரன்’ படத்தில் சாய் பல்லவி  சிவகார்த்திகேயனிடம் தனது காதலைச் சொல்லிவிட்டு, ஒரு காகிதத்தில் தனது ஃபோன் நம்பரை எழுதி சிவகார்த்திகேயனிடம் தூக்கி எறிவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்து.

ADVERTISEMENT

இந்த காட்சியில் சாய் பல்லவி எழுதும் ஃபோன் நம்பர் தெளிவாகப் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டிருக்கும். இங்கிருந்து தான் வாகீசனுக்கு பிரச்சினை ஆரம்பித்தது.

படத்தில் வரும் மேற்குறிப்பிட்ட காட்சியைப்  பார்த்த பலர், அது சாய் பல்லவியின் நம்பர் என்று நம்பி,  படத்தில் நடித்ததற்காக அவரை வாழ்த்த படத்தில் காட்டப்பட்ட ஃபோன் நம்பரை தொடர்பு கொண்டனர்.

ADVERTISEMENT

அந்த நம்பர் சென்னையை சேர்ந்த வாகீசன் என்ற மாணவருடையது.

இதனால் வாகீசனுக்கு நூற்றுக் கணக்கான அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தால் அவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சமூக ஊடகங்களில் சிவ கார்த்திகேயன் மற்றும் ‘அமரன்’ படத்தின் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமியை டேக் செய்து அந்த காட்சியை நீக்க சொல்லியுள்ளார்.

ஆனால் அவர்களிடமிருந்து வாகீசனுக்கு  பதில் வரவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த காட்சியைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும்  ‘அமரன்’ படக்குழுவினருக்கு  வாகீசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

“புதிய வழிமுறை- இவர்களுக்கு சொத்துவரியை ஏற்றவில்லை” : அமைச்சர் நேரு

அதானி- ஸ்டாலின் சந்திப்பு ஏன்? – டாக்டர் ராமதாஸ் கேள்வி!

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share