’கங்குவா’வுடன் வரும் கார்த்தி! : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Published On:

| By Sharma S

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிற நவ.14ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ’கங்குவா’.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா  தயாரிக்கும் இந்தப் படத்தில் பாபி டியோல், திஷா பட்டானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ, நட்டி நடராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகளில் சூர்யா ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது சூர்யா – கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீசரை ‘கங்குவா’ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 38 விநாடிகள் இருக்கும் இந்த டீசரை ‘கங்குவா’ படத்துடன் வெளியிடுவது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிற யுக்தியில் இந்த முடிவை இரண்டு படங்களின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா எடுத்துள்ளார்.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெகு நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

’சூது கவ்வும் – 2’ : ரிலீஸ் எப்போ தெரியுமா..?

சிவகார்த்திகேயன் தந்த பரிசு! : ஜீவி பிரகாஷ் நெகிழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share