புதிய வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், கடந்த 25ம் தேதி பாஜக 54 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம் அருகில் தேர்தல் பணிகளுக்காகத் தனி அலுவலகம் அமைத்துள்ளது. அந்த இடத்தை காங்கிரஸ் பிரமுகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் இலவசமாகக் கொடுத்துள்ளார். இங்கிருந்துதான் தமிழகம் முழுவதும் பாஜக-வுக்கான தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள், ஸ்டிக்கர் உள்ளிட்டவை அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களிக்கக்கோரி, தமிழகத்தில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள 1 கோடி வாக்காளர்களுக்கு பிரதமர் மோடியின் கடிதத்தை தனித்தனியாக அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம், பிரதமரே கடிதம் அனுப்பியுள்ளார் என்று பாஜக-வுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel