இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின் வாழ்க்கை வரலாற்று படங்களைத் தொடர்ந்து சாய்னா நேவாலின் படமும் தயாராக உள்ளது குறித்து சமீபத்தில் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் 400 கோல்களுக்கு மேல் அடித்த பிரபல ஹாக்கி வீரர் தியான் சந்த்தின் வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். ஆனால் அதைத் தொடர்ந்து மற்ற அறிவிப்புகள் வெளிவராத நிலையில் தற்போது படம் குறித்த தகவ்ல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது. இந்த படத்தை ரோஹித் வைத் இயக்க உள்ளார். மேலும் ஹம்டி ஷர்மா கி துல்கனியா, மெயின் டேரா ஹீரோ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த பாலிவுட் நடிகர் வருண் தவான், தியான் சந்த்தாக நடிக்கவுள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் கரண் ஜோஹர் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தோனியின் திரையுலக நுழைவை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
