vகூட்டணிக் கட்சியை நேர்காணல் செய்த ஜெயலலிதா

Published On:

| By Balaji

சனிக்கிழமையும் நேர்காணல் நடந்தது என அறிந்து அதிமுக தலைமை அலுவலகம் முன் வட்டமடித்தனர் அதிமுக-வினர். ஆனால், நேர்காணல் போயஸ் தோட்டத்தில் நடக்கிறது. அதுவும் நமக்கில்லை, கூட்டணி கட்சியினர்க்கு என்றனர், அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள்.

‘ஜெயலலிதாவை மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமூன் அன்சாரி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, ஆகியோர் சந்தித்து அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் ஒருமித்த கருத்தோடு. அவர்களிடம் ‘எப்படி இருக்கீங்க? என்ன என்ன தேவை ? வெற்றிக்கு என்ன பண்ணலாம்?’ என, புன்னகையோடு கேள்விகளை தொடுத்தார் ஜெயலலிதா. ஏற்கனவே சரத்குமார், வேல்முருகன், உ.தனியரசு உட்பட ஏழு கட்சியினர் அதிமுக-வுக்கு ஆதரவு கொடுத்திருக்க தற்போது, மேலும் நான்கு கட்சியினர் தங்கள் ஆதரவை கொடுத்துள்ளனர். அனைவரையும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி கூறியுள்ளார் ஜெயலலிதா.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share