ஏழுமலையான் கோயிலில் 1,400 சிசிடிவி கேமராக்கள்!

Published On:

| By Balaji

திருப்பதி ஏழுமலையான் கோயிலை சுற்றி 1,400 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று (ஜனவரி 6) தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குத் தீவிரவாதிகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கோயிலுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருப்பதி தேவஸ்தானமும் ஆந்திர அரசும் அதிநவீன சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ளதால் 4 கோடி ரூபாய் செலவில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

ADVERTISEMENT

முதற்கட்டமாக உயர் பாதுகாப்பு இடமாகக் கருதப்படும் ஏழுமலையான் கோயில் மற்றும் நான்கு மாடவீதியில் 280 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆறு மாதங்களில் திருமலையைச் சுற்றி 1,400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அலுவலர் ரவி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாதுகாப்பு அலுவலர் ரவி கிருஷ்ணா தலைமையில் கோயிலை ஆய்வு அதிகாரிகள் செய்தனர். பின்னர் தேசிய சிறு தொழில்கள் கழக அதிகாரிகள் ஆய்வுசெய்து, அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்தக் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதற்கான அறிக்கையை வழங்கினர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share