ஆளுநர் சைக்கிள் பயணம் : முதல்வர் நடைப்பயணம்!

Published On:

| By Balaji

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசின் முதலமைச்சராக இருக்கும் நாராயணசாமி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொகுதியில் உள்ள மக்களை வீதி வீதியாக, வீடு வீடாக நடைப்பயணமாகச் சென்று சந்திப்பார். அப்போது, காவல் அதிகாரிகளுக்கு எந்தவிதமான சிரமமும் கொடுக்கமாட்டார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியோ, சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் ஒரு நாள் சைக்கிள் பயணமாக புறப்பட்டுவிடுவார். உடற்பயிற்சிக்காகவும் ஏரியாவை விசிட் செய்வற்தாகவும். ஆளுநர் எந்தப் பகுதிக்குப் போகிறாரோ அந்தப் பகுதி அதிகாரிகள் எங்கும் போகாமல் அழைத்தவுடனேபோவதற்கு தயாராக இருப்பார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை இ.சி.ஆர். சாலையில் ஆளுநர் சைக்கிள் பயணத்தால் ஏகப்பட்ட போலீஸ் போடப்பட்டு சாலையில் போகும் வாகனங்களை விரட்டியபடி இருந்தார்கள். தற்போது புதுச்சேரியில் நடைப்பயணமும், சைக்கிள் பயணமும் நடப்பதைத் தவிர பொதுமக்களுக்கான திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. திட்டப்பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது என்கிறார்கள் புதுச்சேரி மக்கள்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share