வினேஷ் போகத்திற்கு பதக்கம் கிடைக்குமா?

Published On:

| By Minnambalam Login1

vinesh phogat CAS

2024 ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஜூலை 26-ஆம் தேதி ஆரம்பித்த 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைந்தது. இந்திய அணி மொத்தமாக 6 பதக்கங்களை வென்று 71-வது இடத்தை பிடித்தது. முதல் இரண்டு இடங்களை அமெரிக்காவும் (126 பதக்கங்கள்), சீனாவும் (91 பதக்கங்கள்) பிடித்தன.

இந்த ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெண்களுக்கான 50  கிலோ குத்துச்சண்டை பிரிவின் இறுதிப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு, 100 கிராம் எடை கூடுதலாக இருந்த காரணத்தினால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து, வினேஷ் போகத் விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அது மட்டுமல்லாமல், இந்த வருடத்துடன் மல்யுதத்திலிருந்து ஓய்வு பெறுவதாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்தார்.

நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், ஐக்கிய உலக மல்யுத்த விதிமுறைகளில் உள்ள ஒரு விதியை வைத்து, வினேஷ் போகத்திற்குப் பதக்கம் கிடைக்கச் செய்ய முடியும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த விதி:

ஒலிம்பிக்கில் நடந்த மல்யுத்த போட்டிகள், ரவுண்ட் ஆப் 16, கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையைப் பின்பற்றின.

அதாவது… ரவுண்ட் ஆப் 16-இல் எட்டு போட்டியாளர்கள் மற்ற 8 போட்டியாளர்களுடன் மோதுவார்கள். இதில் வெற்றிப் பெறும் 8 நபர்கள், கால் இறுதிக்கு நகர்வார்கள்.

கால் இறுதியில் 4 போட்டியாளர்கள் மற்ற 4 போட்டியாளர்களுடன்  மோதுவார்கள். இதில் வெற்றிப் பெறும் 4 நபர்கள் அரை இறுதிக்கு நகர்வார்கள். அரை இறுதியில் வெற்றி பெற்றவர்கள் இறுதி போட்டியில் மோதுவார்கள்.

இறுதிப் போட்டியில் வெற்றிப் பெறும் நபருக்குத் தங்கப் பதக்கமும், தோல்வி அடையும் நபருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும்.

ரெபசாஜ் அமைப்பும் இரண்டு வெண்கல பதக்கமும்!

ஃபிரெஞ்ச் மொழியில் ரெபசாஜ்( Repechage) என்றால் ‘இரண்டாம் வாய்ப்பு’ என்று பொருள். இந்த ரெபசாஜ் முறை மல்யுத்த போட்டிகளில் கடைப்பிடித்து இரண்டு வெண்கலப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

அதாவது… இறுதிப் போட்டியில் பங்கேற்கிற இரு போட்டியாளர்களிடம், ரவுண்ட் ஆப் 16, கால் இறுதிப் போட்டி, மற்றும் அரை இறுதியில் தோற்றவர்கள், ரெபசாஜ் ரவுண்டில் இரண்டு வெண்கல பதக்கத்திற்காக அவர்களுக்குள் மோதிக்கொள்வார்கள்.

இந்த விதியின் படி இறுதி போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்காததால், ரவுண்ட் ஆப் 16-இல் அவரிடம் தோற்ற ஜப்பான் நாட்டின் யுயி சுசாகி ரெபசாஜ் ரவுண்டில் பங்கேற்று வெண்கலம் வென்றது செல்லாது. இதனால் வினேஷ் போகத்திற்கு வெண்கல பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கிரஹாம் தோர்ப் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்!

“பதவிக்காலம் முடிந்தும் ஆளுநர் பதவியில் தொடர்வது ஏன்?” – தேநீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ்

வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கடனை திருப்பி கேட்க மாட்டார்கள்… மகளை கொன்ற தாய்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share