ADVERTISEMENT

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களின் வீடியோ வெளியீடு!

Published On:

| By Selvam

uttarakhand tunnel workers video

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் வீடியோ காட்சிகள் இன்று (நவம்பர் 21) வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரியில் சில்க்யாரா மற்றும் போல்கோவன் கிராமங்களை இணைக்கும் வகையில் சார் தாம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி அன்று சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

ADVERTISEMENT

uttarakhand tunnel workers video

இந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக ட்ரில்லிங் இயந்திரங்கள் மூலமாக துளையிட்டு தொழிலாளர்களை வெளியேற்றவும், பைப்கள் மூலம் ஆக்சிஜன் மற்றும் குடிநீர் செலுத்தப்பட்டு வந்தது. தொடந்து 9-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் என்ன நிலைமையில் உள்ளனர் என்பதை அறிய எண்டோஸ்கோபிக் கேமரா அனுப்பபட்டது. அதில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அந்த வீடியோவில் சுரங்க தொழிலாளர்கள் தங்களது பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மட் அணிந்துள்ளனர். அனைவரும் ஒரே இடத்தில் குழுமியிருந்து சுரங்கத்தில் இருந்து எப்படி வெளியேறப்போகிறோம் என்று செய்வதறியாமல் உள்ளனர். தொழிலாளர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படை வீரர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை!

கிச்சன் கீர்த்தனா: மட்டர் பனீர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share